Latestவிளையாட்டு

காலிறுதியில் ரஷ்யா-குரோஷியா! ஸ்பெய்ன்- டென்மார்க் வீழ்ச்சி!

மாஸ்கோ, ஜூலை.2- உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மேலும் அதிர்ச்சி. முன்னாள் சாம்பியனான ஸ்பெய்ன், பெனால்டிக் கோல்களில் ரஷ்யாவிடம் தோல்வி கண்டு வேதனையுடன் வீடு திரும்பும் வேளையில் குரோஷியாவிடம் தோல்வி கண்டு டென்மார்க்கும் வீட்டுக்கு புறப்பட்டது.

இந்த வெற்றியின் வழி, போட்டியை ஏற்று நடத்தும் நாடான ரஷ்யா, காலிறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றிருக்கிறது. ஏற்கெனவே அர்ஜெண்டினா, போர்த்துக்கல் போன்ற கால்பந்து பலசாலிகள் வீழ்ச்சி கண்டு வெளியேறி இருக்கும் நிலையில் அதே கதிக்கு ஆளானது ஸ்பெய்ன்.

ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் ரஷ்யாவின் தற்காப்பு ஆட்டக்காரர் அடித்த சொந்தக் கோலினால் 1-0 என்ற கோல்கணக்கில் ஸ்பெய்ன் முன்னிலைக்கு வந்தது. எனினும் 41 ஆவது நிமிடத்தில் தனக்குக் கிடைத்த பெனால்டியை பயன்படுத்தி ரஷ்யா ஆட்டத்தைச் சமமாக்கியது.

பிற்பகுதி ஆட்டத்தின் போது இடைவிடாத தாக்குதல்களை ஸ்பெய்ன் நடத்தியது என்றாலும், முழு வீச்சில் ரஷ்யா தற்காப்பில் கவனம் செலுத்தியதால் கடைசி வரை ஸ்பெய்ன் ஆட்டக்காரர்கள் கோலடிக்க இயலவில்லை.

வழக்கமான ஆட்டநேரம் முடிந்து கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டும் எந்தத் தரப்பும் கோலடிக்காமல் போனதால், பெனால்டி வழி வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. இதில் 4-2 என்ற பெனால்டிக் கோல்களில் ரஷ்யா வென்று காலிறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றது.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா குழு 3-2 என்ற பெனால்டிக் கோலகலில் டென்மார்க்கை வென்று காலிறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றது.

குதல் நேரம் வழங்கப்பட்டும் இரண்டு குழுக்களுமே 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்ததால் பெனால்டிகள் வழங்கப்பட்டன. ஐந்து பெனால்டிகளில் 3 பெனால்டிகளை குரோஷியா கோலாக்கியது.

இரண்டு பெனால்டிகளை மட்டுமே டென்மார்க் கோலாக்கியதால் ஏமாற்றத்துடன் அக்குழு போட்டியில் இருந்து வெளியேறியது. காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவுடன் குரோஷியா குழு மோதவிருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker