Latestஉலகம்

தண்ணீரில் விஷம் கலந்தது யார்? 60 மாணவிகள் கவலைக்கிடம்

பர்வான்,ஜூலை.2- ஆப்கானிஸ்தானில் கடுமையான விஷம் கலந்த தண்ணீரை குடித்த மாணவிகள் 60க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கிழக்கு பர்வான் பகுதியில் சார்பியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயின்று வரும் மாணவிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அருகாமையில் உள்ள கால்வாயில் தண்ணீர் குடித்துள்ளனர்.

தண்ணீரைக் குடித்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து 100க்கும் மேற்பட்ட மாணவிகள் மயங்கி விழ ஆரம்பித்துள்ளனர். இதனால் பதறிப் போன பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவிகளை மீட்டு சரிகார் பகுதியிலுள்ள மருத்துவமனயில் சேர்ந்துள்ளனர்.

இதனையடுத்து பரிசோதனை மேற்கண்ட மருத்துவர்கள் மாணவிகளில் 60 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் அருந்திய நீரில் கடுமையான விஷம் கலந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நீரில் விஷம் கலக்கப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker