Latestமலேசியா

மஇகா தலைவர் தேர்தல்: சுப்ரா விலகல்? ஏகமனதாக விக்னேஸ்வரன் தலைவரா?

கோலாலம்பூர், ஜூலை.2- பொதுத்தேர்தல் முடிந்து கட்சி தேர்தலை ம.இ.கா எதிர்நோக்கி இருக்கும் நிலையில் தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிடவிருந்த நடப்பு தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் போட்டியிலிருந்து ஒதுங்க முடிவு எடுத்துள்ளார் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.

இதன் காரணமாக தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நடப்பு உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் போட்டியின்றி வெற்றிப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய பொதுத்தேர்தலில் மஇகா மிகக் கடுமையான தோல்விகளை சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில் அடுத்து வரும் கட்சித்தேர்தல் பரபரப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய தலைவர் பதவிக்கு  டாக்டர் சுப்ரா  போட்டியிடப் போவதில்லை  என முன்பு டாக்டர் சுப்ரா கூறியிருந்தார்.

அவ்வாறு டாக்டர் சுப்ரா போட்டியிடாத நிலையில் தாம் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக  மக்களைவையின், சபாநாயகரான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்தார்.

எனினும், நாடு தழுவிய அளவில் கட்சிக்குள் இருக்கும் ஆதரவைக் கருதி, டாக்டர் சுப்ரா,  தெசிய தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

இருப்பினும், போட்டியிடுவதில்லை என்ற தம்முடைய வாக்குறுதியில் இருந்து டாக்டர் சுப்ரா பின்வாங்கக்கூடாது என விக்னேஸ்வரனின் ஆத்அரவாளர்கள் நெருக்குதல் அளித்து வந்தனர்.

பொதுத்தேர்தல் தோல்விக்குப் பின்னர் கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

எனினும், தற்போதைய நிலவரப்படி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் டாக்டர் சுப்ராவுக்கு ஆர்வமில்லை என்றும் அவர் போட்டியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, தலைவர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கும் விக்னேஸ்வரன் போட்டியின்றி அப்பதவிக்கு தேர்வு பெறக் கூடும் என்று மஇகா வட்டாரங்கள் கருதுகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker