Latestமலேசியா

ரிம.1 டிரில்லியன் கடன் என்றாலும், மலேசியா வலுவாக உள்ளது! -உலக வங்கி

கோலாலம்பூர், ஜூலை. 2- மலேசியாவின் கடன் தொகை ரிம.1 டிரில்லியனாக உள்ள போதிலும், அதன் பொருளாதாரம் வலுவாக உள்ளதாக உலக வங்கி குழுமம் நம்புவதாக புருணை, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்று தாய்லாந்து நாடுகளின் உலக வங்கி அலுவலக இயக்குநர் மாரா வார்விக் கூறினார்.

“மலேசியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. அதிக வருவாய் பெரும் நிலையை அடைய மலேசியா முயற்சித்து வருகிறது” என்று அவர் சொன்னார்.

“நாட்டின் வளர்ச்சி தரம், தொடர்ந்து மேம்பாட்டை நோக்கி செயல்படும் உள்நோக்கத்தை கொண்டு, மலேசியர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று மாரா தெளிவுப் படுத்தினார்.

இதனிடையில், மலேசியாவின் கடனைத் திரும்பச் செலுத்துவது தொடர்பில் புதிய பக்காத்தான் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையை கையாள வேண்டும். அதுமட்டுமல்லாது, அந்தக் கடன் தொடர்பில் அரசாங்கம் விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் ரெக்கோர்ட் கூறினார்.

நாட்டின் கடன் தொகை அதிகமாக இருந்த போதிலும், அதனால், பொருளாதாரத்திற்கு பாதகம் ஏதும் நேராது என்றும் அவர் தெரிவித்தார்.
மலேசியாவின் பொருளாதாரம் இவ்வாண்டு 5.4 விழுக்காடாக உயரும் என்று உலக வங்கியின் மலேசிய பொருளாதார அறிக்கை தெரிவித்துள்ளது.

அரசாங்கம் நுகர்வு வரியை தகர்த்தி உள்ளதால், பொருளாதாரம் உயர்வு காண அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையில், நடப்பு நிதியாண்டின் 2.8% என்கின்ற நிதி பற்றாக்குறை இலக்கை அரசாங்கம் அடைய வேண்டும் என்று உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker