Latestமலேசியா

ரிம2.6 பில்லியன் பற்றி ஸெத்திக்குத் தெரியுமே! ஆனால், அவர் ஏன் ஏதும் கேட்கவில்லை? – நஜிப்

கோலாலம்பூர், ஜூலை.2- தமது வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் இருந்தது அப்போதைய பேங்க் நெகாரா ஆளுநர் டான்ஶ்ரீ ஸெத்தி அக்தார் அஸிசுக்கு 13-வது பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே தெரிய வந்திருக்கிறது. ஆனால், அது குறித்து ஏன் ஸெத்தி கேள்வி கேட்கவில்லையென முன்னாள்பிரதமர் நஜிப் தற்போது ஒரு புது சர்ச்சையை எழுப்பியுள்ளார்.

“ஸெத்திக்கு உண்மை தெரிந்தும் பேசாமல் இருந்ததால்தானே ஒரு பிரச்சனையும் இல்லை போல என்று நான் நினைத்தேன்” என மலேசியாகினிக்கு வழங்கிய பேட்டியில் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையாக ஸெத்தி எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லையா என்று வினவியபோது, “இல்லையே, பேங்க் நெகாராவிடமிருந்து பதிலே வரவில்லை. அதனால் எல்லாம் சுமூகமாகத்தான் இருக்கிறது என நான் எண்ணியிருந்தேன்” என அவர் தெளிவுப்படுத்தினார்.

இந்நிலையில், ஸெத்திக்கு எதிரானை இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக அவரது விளக்கத்தைக் கண்டறிவதற்காக மலேசியாகினி ஸெத்தியை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 2.6 பில்லியன் ரிங்கிட் சவூதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் தமக்கு நன்கொடையாக கொடுத்தது என்றே நஜிப் இதுவரையிலும் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker