Latestமலேசியா

1எம்டிபி விவகாரம்: நஜிப்பின் வளர்ப்பு மகனிடம் எம்.ஏ.சி.சி விசாரணை!

கோலாலம்பூர், ஜூலை. 2- 1எம்டிபி நிதி முறைக்கேடு விவகாரம் தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் வளர்ப்பு மகனிடம் நாளை விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது.

நஜிப்பின் வளர்ப்பு மகனான் 48 வயதான ரீஸா அஸீஸிடம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நாளை (3-ஆம் தேதி) விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது என்ற தகவலை அந்த ஆணையத்தின் வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

“நாளை எம்.ஏ.சி.சி தலைமை அலுவலகத்திற்கு வந்து, 1எம்டிபி தொடர்பிலான விசாரணைக்கு உதவுமாறு நாங்கள் ரீஸாவிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்” என்று தகவல் வெளியிட்ட நபர் தெரிவித்தார்.

ரெட் கிரைனைட் பிக்சர்ஸ் எனப்படும் ஹோலிவூட் திரைப்படங்களை வெளியிடும் நிறுவனத்தின் கூட்டு உரிமையாளரான ரீஸா அஸீஸ், நஜிப்பின் துணைவியார் டத்தீன்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரின் முன்னாள் கணவரின் மகனாவார்.

ஈராண்டுகளுக்கு முன்னர், 1எம்டிபி நிறுவனத்திலிருந்து ‘எடுக்கப்பட்டதாக’ நம்பப்படும் அமெரிக்க டாலர் 238 மில்லியன் தொகையிலிருந்து,  64 அமெரிக்க டாலர் மில்லியன் தொகை, ரெட் கிரைனைட் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக அமெரிக்கா சட்டத்துறை அந்நிறுவனத்தை குற்றஞ்சாட்டியது.

அந்த நிறுவனம், அப்போது, மிகவும் பிரபலமான ‘தெ வூல்ஃப் ஒப் தெ வால் ஸ்தீரீட்’ (The wolf of wall street) என்ற வெற்றி திரைப்படத்தை வெளியிட்டிருந்தது. 1எம்டிபியிலிருந்து திருடப் பட்ட பணத்தில் தான் அந்தப் படம் வெளியீடு கண்டது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த மார்சு மாதம், ‘ரெட் கிரைனைட் பிக்சர்ஸ், அமெரிக்க டாலர் 60 மில்லியனை, அமெரிக்க அரசாங்கத்திடம் திருப்பி தர ஒப்புக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker