Latestமலேசியா

கோலாலம்பூரில் நிலங்கள் விற்பனை; விசாரணை தொடங்கப்படும்!

கோலாலம்பூர், ஜூலை. 3- கோலாலம்பூரில், சந்தேகத்திற்குரிய வகையில் 64 நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பில் கூடிய விரைவில் உள் விசாரணை தொடங்கப் படும் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் சமாட் கூறினார்.

“நான் இன்று தான் எனக்கு வழங்கப்பட்ட வேலையை தொடங்கவுள்ளேன். வேலைக்கு வந்தவுடன் விசாரணை அதிகாரி போல் செயல்பட நான் விருப்பம் கொள்ளவில்லை. இந்த அமைச்சின் அனைத்து பிரச்சனைகளையும் நான் முதலில் கண்டறிய வேண்டும். ஒரே விஷயத்தில் மட்டும் கவனத்தை செலுத்த நான் விரும்பவில்லை.

“இருந்த போதிலும், 64 நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தொடர்பில் கூடிய விரைவில் விசாரணை தொடங்கப்படும். இந்த விவகாரம் தொடர்பில், இந்த அமைச்சின் பொது செயலாளர், அனைத்து விவரங்களையும் என்னுடன் பகிர்ந்துக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் சொன்னார்.

இந்த நில விற்பனை விவகாரம் தொடர்பிலான உள் விசாரணையில், கூட்டரசு பிரதேச அமைச்சு தலையிடாது என்றும், அந்த விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொள்ளும் என்றும் காலிட் தகவல் தெரிவித்தார்.

அந்நில விற்பனையில் ஊழல், மோசடி நிகழ்த்தப் பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, அவ்வமைச்சு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று அவர் கூறினார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கி 2018-ஆம் ஆண்டு வரை, 428 கோடி ரிங்கிட் மதிப்பிலான 64 துண்டு நிலங்கள் கோலாலம்பூரில் டெண்டர்கள் ஏதுமின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் பிரசுரிக்கப் பட்டதை தொடர்ந்து, அது குறித்து உள் விசாரணை தொடங்கப்படவிருக்கின்றது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker