Latestமலேசியா

ஜமால் விரைவில் மலேசியாவுக்கு கொண்டு வரப்படுவார் – ஐஜிபி

ஷா ஆலாம், ஜூலை.3- சர்ச்சைக்குரிய அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஶ்ரீ ஜமால் யுனோஸ் இந்தோனேசியாவில் இருந்து விரைவில் மலேசியாவுக்கு கொண்டு வரப்படுவார் என தேசிய போலீஸ் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புஸி ஹருண் தெரிவித்தார்.

எனினும், எப்போது ஜமாலை இந்தோனெசியப் போலீசார் அனுப்புவார்கள் என அவர் எந்தத் தேதியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

ஜமாலை மலேசியாவுக்கு கொண்டுவரும் முன்னர், அவர் எவ்வாறு சட்டவிரோதமாக இந்தோனேசியாவுக்குள் நுழைந்தார் என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக புஸி குறிப்பிட்டார்.

இந்தோனேசியாவில் நேற்று மாலை மணி 6.15 அளவில் ஜமால் கையும் களவுமாக கைதானார் என்பதை உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் உறுதிப்படுத்தியிருந்தார்.

கே.பி.ஜே. அம்பாங் புத்ரி நிபுணத்துவ மருத்துவமனையில் முதுகு வலி காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் போலீஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட அம்னோ சுங்கை பெசார் தொகுதியின் தலைவர் ஜமால் யூனோஸ் கடந்த மே மாதம் 25-ஆம் தேதி மாலை 5.00 மணி அளவில் தலைமறைவாகினார்.

நீதிமன்றத்தின் துணைப் பதிவதிகாரி நீதிமன்ற நடைமுறையின் காரணமாக அந்த மருத்துவமனைக்கு சென்றபோது ஜமால் யூனோஸ் அங்கு இல்லை என்பதை கண்டறிந்தார்.

அதையடுத்து, அவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அவரை பலமுறை தொடர்பு கொண்டும் முடியவில்லை. அவரது வாட்சாப்பும் கடந்த மே-10ஆம் தேதியிலிருந்து செயல்படாமல் போயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker