Latestமலேசியா

நஜிப் கைது, எம்.ஏ.சி.சி அதிரடி நடவடிக்கை!

கோலாலம்பூர், ஜூலை.3- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் இன்று பிற்பகல் 3 மணி அளவில் தமது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.

1எம்பிடி நிறுவனத்தின் நிதி முறைகேடு தொடர்பாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் அவரை கைது செய்துள்ளது. ஏற்கெனவே, அவரிடம் இரண்டு முறை இந்த நிதி முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் விசாரணைகள் நடத்தினர்.

கைது செய்யப்பட்ட அவர் தற்போது ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் எனத் தெரிகிறது. இதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த கைது விவகாரம் குறித்து பின்னர் விரிவான அறிக்கை வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker