Latestமலேசியா

நஜிப் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்

கோலாலம்பூர், ஜூலை.3- இன்று பிற்பகலில் தம்முடைய இல்லத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் நாளை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.

நாளை காலை 8.30 மணி அளவில் கோலாலம்பூர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்க நீதிமன்ற அனுமதியை எம்.ஏ.சி.சி பெறும் என்று 1எம்டிபி விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

1எம்டிபி நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி இண்டர்நெஷனல் விவகாரம் தொடர்பில் நஜிப் இன்று பிற்பகல் மணி 2.45 அளவில் அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த மே 9-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நஜிப் படுதோல்வி அடைந்ததை அடுத்து, 1எம்டிபி தொடர்பில் நஜிப் மீது தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker