Latestமலேசியா

இந்துதர்ம மாமன்றத்தின் 36-வது பேராளர் மாநாடு

கோலாலம்பூர், ஜூலை.3- மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 36-வது தேசியப் பேராளர் மாநாடு ஜூலை 7-ஆம் தேதி சனிக்கிழமை  நடைபெறவுள்ளது.

இம்மாநாடு மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் உயர்திரு. இராதாகிருஷ்ணன் அழகுமலை A.M.N அவர்களின் தலைமையில் காலை மணி 8.00 முதல் மாலை மணி 6.00 மணி வரை சிரம்பான் ஸ்ரீ பாலத்தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 200 பேராளர்கள் அருள் நிலையங்களை பிரதிநிதித்துப் பங்கேற்க உள்ளனர். அன்று காலை மணி 9.00க்கு மேல் மாநாடு தொடக்கவிழாவில் விருதளிப்பு விழா நடைபெறும்.

மாமன்றத்திற்கும், இந்து தர்மத்திற்கும், சமூகத்திற்கும் ஆற்றிய தன்னலமற்ற திருத்தொண்டினை அங்கீகரித்து ஐவருக்குத் ‘தர்ம சிகாமணி’, ‘தர்ம மாமணி’, ‘தர்ம வர்ஷிணி’, ‘தர்மப் பூஷணி’ மற்றும் தேசிய விருது மாமன்றம் வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கவுள்ளது.

வட்டாரப் பொதுமக்கள் நாட்டிலுள்ள பிற சமய மொழி அரசு சார்பற்ற இயக்கத் தலைவர்கள், ஆலயத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் தவறாமல் தொடக்க விழாவில் 7 ஜூலை காலை மணி 9.00 மணியளவில் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு பணிவன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

பேராளர் மாநாடு குறித்த மேல் விவரங்களுக்கும் தங்கள் வருகையைப் பதிவு செய்வதற்கும் மாமன்றத் தேசியக் கௌரவப் பொதுச் செயலாளர் திரு ரிஷிகுமார் வடிவேலு அவர்களைக் கைபேசி எண்: 012 – 2016115 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker