Latestமலேசியா

என் பெயரைக் காப்பாற்றிக் கொள்வேன் – நஜிப்

கோலாலம்பூர், ஜூலை.4- தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து தாம் கோரி இருக்கும் மறு விசாரணை தமது நற்பெயரை மீட்டு எடுப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு என ஊழல் முறைகேடு வழக்கில் சிக்கிய முன்னாள் பிரதமர் நஜிப் கூறியுள்ளார்.

“நான் தவறிழைக்கவில்லை. என் மீது சுமத்தப்பட்ட கடுமையான மோசமான குற்றச்சாட்டுகளைத் தகர்த்தெறிந்து என் நற்பெயரைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு வாய்பாக இந்த மறு விசாரணையை எடுத்துக் கொள்கிறேன்” என கோலாலம்பூர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய நஜிப் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

நேற்று கைதான நஜிப்புக்கு எதிராக இன்று நீதிமன்றத்தில் 3 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளும், ஓர் அதிகார முறைகேடு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து நஜிப் விசாரணை கோரினார்.

அதன் அடிப்படையில், 10 லட்சம் ரிங்கிட் ஜாமின் உத்தரவாதத்தில் நஜிப் விடுதலையானார். இந்த வழக்கு விசாரணை அடுத்தாண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker