Latestமலேசியா

காணாமல் போன கைக்குழந்தை குளிர்பதனப் பெட்டிக்குள்! 2 பேர் கைது!

கோம்பாக், ஜூலை.4- பத்துகேவ்சில் உள்ள கம்போங் நக்கோடாவில்  அடாம் ரைக்கால் முகமட் சுபி என்ற மூன்று மாதக் கைக்குழந்தையின் சடலம்,  குழந்தையை பராமரித்து வந்தவரின் வீட்டில் இருந்த குளிர்பதனப் பெட்டிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தக் கைக்குழந்தையின் சடலம் குளிர்பதன பெட்டியின் உறைவு இடத்தில் மறைத்து வைக்கப் பட்டிருந்தது இரவு 11 மணி கண்டுபிடிக்கப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் அதிகாரி அலி அகமட் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று மாதக் கைக்குழந்தையான அடாம் ரைக்காலை குழந்தைப் பராமரிப்பாளர் வீட்டிலிருந்து அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

அது தொடர்பான விசாரணையின் போது மூன்று மாதக் கைக்குழந்தையான அடாமை பராமரித்தவரின் வாக்குமூலத்தில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் முழுமையாக ஆடை அணிந்திருந்த அந்தக் குழந்தையின் உடல் ஒரு பச்சை நிற பையில் வீட்டின் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப் பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக போலீசார் 33 வயது குழந்தை பராமளிப்பாளரையும் அவரது வீட்டில் தங்கியிருந்த அவரது 36 வயது நண்பரையும் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 302- இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker