Latestமலேசியா

தாயைக் கொன்ற தனயன்!

செப்பாங், ஜூலை.4- தாமான் வாரிசான் இன்டாவில் உள்ள ஒரு வீட்டில் மனநிலை சரியில்லாத தனது மகனால் மாது ஒருவர் கொல்லப்பட்டார்.

நேற்று இரவு 8.05 மணி அளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். கொல்லப்பட்ட 60 வயது மாதுவின் இரண்டு கைகளிலும் வயிற்றிலும் காயங்களும் இருந்ததை தடயவியல் நிபுணர்கள் குழு கண்டறிந்தது.

அதோடு, அவரின் மூக்கு,பல் மற்றும் உதடுகள் இரத்தம் தோய்ந்த நிலையில் இருந்தன. அந்த மாது ஓர் அரசாங்க ஊழியர் என்பதும் தெரிய வந்துள்ளது.

வீட்டின் கதவில் கைகலப்பு நடந்ததற்கான தடயங்களும் வரவேற்பறையில் உள்ள சோபாவில் இரத்தக் கறையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட அம்மாது சமையலறைக்கு அடுத்து இருக்கும் படுக்கையறைக்கு இழுத்துச் செல்லப்பட்டதற்கான தடயமும் உள்ளதாக தடயவியல் நிபுணர்கள் குழு தெரிவித்தது.

இது தொடர்பாக கொல்லப்பட்ட மாதுவின் 25 வயது மகனை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 302 – இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker