Latestமலேசியா

நஜிப்புக்கு RM10 லட்சம் ஜாமின் ; கடப்பிதழ் பறிமுதல் அடுத்த பிப்ரவரியில் வழக்கு

கோலாலம்பூர் – தம் மீது கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியிருக்கும் நஜிப் துன் ரசாக் 10 லட்சம் ரிங்கிட் ஜாமின் உத்தரவாதத்தில் விடுதலை செய்யப்பட்டார். இந்த தொகையை அவர் இரண்டு தவணைகளாக செலுத்த அனுமதிக்கப்பட்டார்.

இன்று 5 லட்சம் ரிங்கிட் ஜாமின் தொகை செலுத்தப்பட்டது. அவருக்கான பணத்தை அவரது மகனும் மகளும் வழங்கினர். எஞ்சிய 5 லட்சம் ரிங்கிட் அடுத்த வாரம் திங்கட்கிழமை செலுத்தப்படும். அதே வேளையில், நஜிப்பின் கடப்பிதழை நீதிமன்றம் பறிமுதல் செய்தது.

இந்த வழக்கு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் விசாரனைக்கு வரும். அடுத்தாண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையிலும் பின்னர் மார்ச் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரையிலும் அடுத்து மார்ச் 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையிலும் ஆக மொத்தம் 19 நாட்களுக்கு வழக்கை நடத்தப்படும்.

இன்று காலையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கை மோசடி மற்றும் அதிகார முறைகேடு தொடர்பில் 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker