Latestமலேசியா

நஜிப் ஆதரவாளர்கள் கூச்சல்; செய்தியாளர் கூட்டத்தை இரத்து செய்தார் ஏஜி – (VIDEO)

கோலாலம்பூர், ஜூலை.4- நஜிப் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு நடக்கவிருந்த செய்தியாளர் கூட்டத்தை அட்டர்னி ஜெனரல் டோம்மி தோமஸ் இரத்து செய்தார். மலாய் மொழியில் பேசச் சொல்லி நஜிப்பின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் அவர் அவ்வாறு செய்வதாயிற்று.

செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு டோம்மி வந்ததுமே, “மலாய் மொழியில் பேசுங்கள்” என நஜிப் ஆதரவாளர்கள் கூச்சலிடவும் அங்கு நிலைமை மோசமானது. அதனால், செய்தியாளர் கூட்டம் இரத்து செய்யப்பட்டது.

முன்னதாக, விசாரணையை ஆங்கிலத்தில் நடத்துமாறு டோம்மி நீதிபதியைக் கேட்டுக்கொண்டிருந்தார். அதையடுத்து, நஜிப் ஆதரவாளர்கள், “மலாய் மொழியில் பேசத் தெரியாதா? நீங்கள் எந்த நாட்டுக்காரர்?” எனக் கத்தி டோம்மியை கேலி செய்தனர்.

எனினும், அமைதி நிலவும் வரை சிரித்தவாறு பொறுமையுடன் உட்கார்ந்திருந்தார் டோம்மி. ஆனால், நஜிப்பின் ஆதரவாளர்கள் அமைதிக் காப்பதாகத் தெரியவில்லை. எனவே, அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தைத் தூண்டியவர் நடிகை எல்லி சுரியாத்தி ஓமார் என நம்பப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker