Latestஇந்தியா

விரல் காட்டி ‘செல்ஃபி’ எடுத்தால் ஆபத்து தேடி வரும்!

பெங்களூரு, ஜூலை.4- விரலைக் காட்டி செல்ஃபி எடுத்து, சமூக வலைத் தளங்களில் போடும் பழக்கத்தினால் ஆபத்துகள் உருவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கை விரல்கள் தெரியும்படி செல்ஃபி எடுத்துப் போடும் போது கைரேகை தொடர்பான தகவல் வெளியாகி விடும் என்று ஏற்கெனவே சமூக ஊடகங்களில் தகவல் பரவியுள்ளது.

இந்த அம்சத்தை தமிழகத்தின் பிரபல உயர் போலீஸ் அதிகாரி ஐபிஎஸ் ரூபா பொதுமக்களுக்கான எச்சரிக்கையாக விடுத்தார்.

இவ்வாறு விரலைக் காட்டி செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் ஆபத்து ஏற்படலாம். சைபர் குற்றவாளிகள் உங்கள் தகவலைத் திருடி விடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

நம்முடைய கை விரல் ரேகைகளைப் படத்தில் பெரிதாக்கி அவற்றை ஸ்கேனிங் செய்து, பெரிய அளவிலான மோசடிகளுக்கு பயன்படுத்தக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்று ஐபிஎஸ் ரூபா வலியுறுத்தினார்.

மேலும், இதை வைத்து போலியான கைரேகை உருவாக்கப்பட்டு, தவறு நடக்கும் இடங்களில் குற்றவாளிகள் அந்தக் கைரேகைகளை விட்டுச் செல்லக்கூடிய வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னார். இதனால் தயவு செய்து கைரேகை தெரியும்படி செல்ஃபி எடுத்து  வெளியிட வேண்டாம் என்று ஐபிஎஸ் ரூபா கோரிக்கை விடுத்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker