Latestஇந்தியா

அடித்துக் கொடுமைப் படுத்திய நடிகை! -பணிப்பெண் புகார்

மும்பை, ஜூலை. 5- என்னை அடித்து கொடுமைப்படுத்தி சம்பளம் தரவில்லை என்று போலிவுட் நடிகை கிம் ஷர்மா மீது அவரது வீட்டில் வேலை பார்க்கும் பெண் போலீசில் புகார் செய்தார்.

துணி துவைத்த போது கறுப்பு நிற உடையின் கலர் போய், அது வெள்ளை நிற டி-சர்ட் மீது பட்டுவிட்டது. என் தவற்றை உணர்ந்து கிம் ஷர்மாவிடம் உடனே தெரிவித்தேன். அவர் என்னை வீட்டை விட்டு வெளியே போகுமாறு பிடித்து தள்ளியதுடன் அசிங்கமாக திட்டினார்.

தன்னை அடித்து கொடுமைப்ப டுத்தியதோடு சம்பளம் கொடுக்கவில்லை என்று நடிகை மீது பணிப் பெண் எஸ்தர் புகார் தெரிவித்துள்ளார்.

அவரின் புகாரின் பேரில் போலீசார் கிம் ஷர்மா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விலை மதிப்புள்ள மதிப்புள்ள ஆடையை பாழாக்கி விட்டார் எஸ்தர் .அந்தக் கோபத்தில் தான் அவரை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னேன். ஆனால் அவரை நான் அடிக்கவில்லை என்று கிம் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker