Latestஇந்தியா

கள்ள நோட்டுகள் அச்சடித்த கேரள நடிகை கைது!

திருவனந்தபுரம், ஜூலை.6- கேரளாவில் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகமாக உள்ளதாக போலீசாருக்கு பல புகார்கள் வந்ததால், அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையில் கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலையும் அதற்கு மூலகாரணமான மலையாள தொலைக்காட்சி நடிகையையும் கைது செய்துள்ளனர்.

அண்மைய காலமாக கேரளாவில் அதிகளவில் கள்ள நோட்டு புழக்கம் இருந்தது. இதையடுத்து அதை கட்டுப்படுத்த போலீசார் மாநிலம் முழுவதும் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தக் கும்பலின் பின்னணியில் பிரபல மலையாள தொலைக்காட்சி நடிகை சூரியா (36) இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் வசித்து வரும் பங்களாவை போலீசார் இரகசியமாக கண்காணித்தனர்.

இதையடுத்து நடிகை சூரியா, அவரது தாய் ரமாதேவி, தங்கை சுருதி ஆகியோர் கைதாகினர். கள்ளநோட்டு அடிக்க பயன்படுத்தப்பட்ட சாதனங்கள்,ரூ 57 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மூவரையும் கட்டப்பனை நீதிமன்றத்தில் முன்நிலை படுத்தி திருச்சூர் மத்திய சிறையில் அடைந்தனர்.

இதற்கிடையே இந்தக் குடும்பம் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்துள்ளன. சூர்யாவின் தந்தை குவைத்தில் விபத்தொன்றில் மரணமுற்றார், அவரது மரணத்தில் லட்சக்கணக்கான பணம் நஷ்ட ஈடாக கிடைத்திருக்கிறது. அந்தப் பணத்தில் மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்,

இதற்கிடையில் சூர்யாவுக்கு திருமணமாகி, விவாகாரத்தும் பெற்று விட்டார். அவரது தாய் ரமாதேவி கந்து வட்டி தொழில் புரிந்திருக்கிறார். இந்நிலையில் பாலக்காட்டை சேர்ந்த பிஜூ என்ற சாமியாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த சாமியாரோடு தான் ரமாதேவிக்கு தொடர்பு ஏற்பட்டு பின்னர் கள்ளநோட்டு கும்பலுடன் முடிச்சி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் பிஜூ. அச்சடித்த கள்ளநோட்டுகளை இவர்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் புழக்கத்தில் விட தீர்மானித்து அதற்கான ஏஜண்டுகளை ஒப்பந்தம் பேசி வந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கேரளாவில் உள்ள பல அரசியல் பிரமுகர்களுடன் ரமாதேவிக்கு தொடர்பு இருந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆசிரமம் நடத்தும் பிஜூ ஒரு போலி சாமியார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker