Latestமலேசியா

3 எண்ணெய் கொள்கலன்கள் தீப்பற்றி எரிந்தன! ஒருவர் தீக்காயம்! (VIDEO)

கெமாமான், ஜூலை. 5 – தெலுக் காலோங் தொழிற்பேட்டையில் உள்ள கெமாமான் பிடுமன் தொழிற்சாலைக்குச் சொந்தமான மூன்று எண்ணெய் கொள்கலன்கள் தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் தீக்காயத்துக்கு இலக்கானார்.

நேற்று மாலை 6.15 மணி அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தை அடுத்து அடர்த்தியான கரும் புகையை ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்கு வானில் காண முடிந்ததால் சுற்றுவட்டார மக்கள் பீதியடைந்தனர்.

40,000 லிட்டர் கச்சா எண்ணெய் நிரப்பப்பட்ட பெரிய எண்ணெய் கொள்கலன் மூலம் தான் தீ பரவியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. வேகமாக பரவிய தீ மற்ற எண்ணெய் இரு கொள்கலன்களுக்கும் பரவியது.

சம்பவத்தின் போது எண்ணெய் கொள்கலன் அருகே பராமரிப்பு வேலைகளைச் செய்துக் கொண்டிருந்த 42 வயது ரோஸ்லி முகமட் என்பவரின் முகம் மற்றும் வலக் கையில் தீக்காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

ரோஸ்லி முகமட் தற்போது சுல்தானா நோர் சாஹிரா மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக திரங்கானு தீயணைப்பு, மீட்புப்படையின் இயக்குனர் அஸ்லிமின் மாட் நோர் அதிகாலை 2.30 மணி அளவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும், அத்தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக பரவும் செய்தியை அவர் மறுத்தார். இன்று மதியத்துக்குள் தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விடும் எனவும் அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker