Latestமலேசியா

தைவான் நடிகையுடன் நஜிப்பின் மகன், உல்லாச உலா? – (VIDEO)

கோலாலம்பூர், ஜூலை.6- உலகமே பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கும் 1எம்டிபி ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கைது செய்யப்பட்டு, நேற்று முன்தினம் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று அவரது மகன் முகமட் நஸிபுடின் தைவானில் நடிகை ஒருவரோடு உல்லாசமாக விருந்துண்ட செய்திகள் இன்று வெளியாகியுள்ளன.

தைவானிய “APPLE DAILY” செய்தி நிறுவனம் படங்களுடனும், காணொளியுடனும் வெளியிட்ட இந்தச் செய்தி, உள்ளூர் ஊடகங்களிலும் வெளியாகி வருகிறது.

தைப்பே 101 கோபுரத்துக்கு அருகிலுள்ள “Breeze Xinyi” என்ற பேரங்காடியில் அமைந்துள்ள ஓர் உணவகத்தில், நஸிபுடினும் சிலியா ஸாங் என்றழைக்கப்படும் நடிகையும் வைன் அருந்திக் கொண்டிருந்ததாக அந்த தைவானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் இரண்டு மணி நேரத்தை அங்கு கழித்துவிட்டு பின்னர் இருவரும் டெக்சியில் ஏறி ஓர் உடம்புப் பிடி மையத்திற்குச் சென்றதாகவும், அதை அடுத்து அதிகாலை மணி 1 அளவில் இன்னொரு டெக்சி எடுத்து “Grand Hyatt” என்ற தங்கும் விடுதிக்குச் சென்றதாகவும் தெரிகிறது.

இதில் என்ன வேடிக்கை என்றால், நேற்றிரவு அந்த நடிகையுடன் உல்லாசமாக இருந்த நேரத்தில்தான், “மலேசிய மக்களுக்காக எந்த துன்பத்தையும் அனுபவிக்கத என் தந்தையார் தயாராக இருக்கிறார்” என நஸிபுடின் தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உல்லாசமாக இருந்த சமயத்தில், வருத்தத்துடன் இருப்பது போல் நஸிபுடின் ஒரு பாவலா காண்பித்திருக்கிறார் போலும் எனவும் அச்செய்தி நிறுவனம் அவரை விமர்சித்திருக்கிறது.

இதனிடையே, நஸிபுடின் தைவானுக்கு சுற்றுலாவுக்குத்தான் வந்ததாகவும், தனது தந்தையின் விவகாரம் தொடர்பில் மனமுடைந்து இருந்த நஸிபுடினுக்கு ஒரு தோழி என்ற முறையில் சிறிது நேரம் தான் துணையாக இருந்ததாக சிலியா ஸாங் கூறியுள்ளார்.

அவர்கள் இருவரும் கடந்த மூன்றாண்டுகளாகத்தான் நட்பில் இருப்பதாகவும், தொடக்கத்தில் நஸிபுடின் மலேசியப் பிரதமரின் மகன் என்ற பின்னணியே தனக்கு தெரியாது என்றும் சிலியா மேலும் விவரித்துள்ளார்.

இதனிடையே, நஸிபுடின் இன்று மலேசியா திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker