Latestமலேசியா

நஜிப் வங்கிக் கணக்குகள் முடக்கம்: அதிருப்தியா? வழக்குத் தொடுங்கள்

புத்ராஜெயா, ஜூலை.6- தங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கியது தவறென நினைத்தால், நஜிப் குடும்பத்தார் தாராளமாக நீதிமன்றத்தில் அரசாங்கம் மீது வழக்கைத் தொடுக்கலாம் என பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

“வங்கிக் கணக்குகளை முடக்கியதாக நஜிப் குடும்பம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. தவறு என்றால் அவர்கள் நீதிமன்றத்திற்கு வழக்கை கொண்டுச் செல்லட்டும்” என புத்ராஜெயா, பெர்டானா வாரியத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது வங்கிக் கணக்கு மட்டுமில்லாது தனது 10 மாதக் குழந்தையின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டதாகவும், இது என்ன பக்காத்தான் அரசின் பழிவாங்கும் செயலா என்று நஜிப்பின் மகள் நூர்யானா நஜ்வா நேற்று தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker