Latestமலேசியா

பினாங்கில் வீதியோரக் கடைகள் உடைப்பு!

ஜோர்ஜ் டவூன், ஜூலை.6- பினாங்கு மாநில அரசாங்கத்தின் அனுமதியின்றி சாலை ஓரங்களில் நிறுவப்பட்டிருக்கும் கடைகள் உடைக்கப் படும் என்று அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேற்று தஞ்சோங் தோக்கோங் என்ற பகுதியில், வீதியோரம் போடப்பட்ட கடைகளை உடைத்து தகர்த்தப் பின்னர், அதேப் போன்று அம்மாநிலத்தின் இதர பகுதிகளில் அனுமதி இன்றி அமைக்கப் பட்டுள்ள கடைகள் அனைத்தும் தகர்க்கப் படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ தெரிவித்தார்.

சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு மாநில அரசாங்கம் பலமுறை கடை உரிமையாளர்களை கேட்டுக் கொண்டதாகவும், அதற்காக அவர்களுக்கு பலநாள் அவகாசம் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால், மக்கள் தங்களின் இஷ்டத்திற்கு செயல்படுவது நிறுத்தப் பட வேண்டிய அவசியம் இப்போது வந்துள்ளதாக அவர் சொன்னார். மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அவர்கள் அக்கடைகளை, வீதியோரம் எறு கூட பாராமல் நிறுவிக் கொள்கின்றனர் என்றார் அவர்.

“சாலை ஓரம் கடைகளை அமைப்பதால், மக்களின் பாதுகாப்பிற்கு பாதகம் நேரக்கூடும். அப்பகுதிவாழ் மக்களுக்குச் சிரமங்கள் ஏற்படக் கூடும்” என்று அவர் கருத்துரைத்தார்.

தஞ்சோங் தோக்கோங் பகுதியில் அக்கடைகளிலிருந்து பொருட்கள் வாங்குவதற்காக பல வாகனமோட்டிகள் சாலைகளை மறைக்கும் வகையில், வாகன்ங்களை நிறுத்துவதால், அச்சாலைகளை பயன்படுத்தும் மற்ற வாகனமோட்டிகள் பல சிரமங்களுக்கு உள்ளாகினர் என்று ஜக்தீப் சொன்னார்.

“இதன் காரணத்தால், அப்பகுதியில் சில சாலை அசம்பாவிதங்களும் நேர்ந்துள்ளன. பல ஆண்டுகளாக அப்பகுதியில் அந்தக் கடைகள் அமைக்கப் பட்டுள்ளன. மக்கள் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். தங்களின் இஷ்டத்திற்கு அங்கும் இங்கும் கடைகளை அமைக்கக் கூடாது” என்று அவர் அறிவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker