Latestமலேசியா

முன்பு எனது வங்கிக் கணக்கும்தான் முடக்கப்பட்டது! – துன் மகாதீர்

புத்ராஜெயா, ஜூலை.6- முன்னாள் பிரதமர் நஜிப் குடும்பத்தாரின் வங்கிக் கணக்குகளை முடக்கியது பழி வாங்கும் நடவடிக்கையே கிடையாது. சட்டத்துக்கு உட்பட்டே அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. அதனால் இதில் அரசாங்கத்தை குறைக் கூறுவதற்கு என்ன இருக்கிறதென பிரதமர் துன் மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“முன்பு எனது வங்கிக் கணக்கும்தான் முடக்கப்பட்டது. எனது நண்பர்களை என்னுடன் பழக அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. ஆனால், நாங்கள் யாரையும் குறைக் கூறவில்லையே” என நஜிப் மகள் நூர்யானா நஜ்வாவின் பேஸ்புக் பதவுக்கு துன் மகாதீர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

தனது 10 மாதக் குழந்தையின் வங்கி கணக்கு உட்பட தங்கள் குடும்பத்தாரின் வங்கிக் கணக்குகள் யாவும் முடக்கப்பட்டதாகவும், இது பக்காத்தான் அரசின் பழிவாங்கும் செயல் என்றும் நஜிப்பின் மகள் நூர்யானா நஜ்வா நேற்று தனது பேஸ்புக் பக்கத்துல் ஆவேசத்துடன் பதிவிட்டிருந்தார்.

ஆனால், நூர்யானாவின் குழந்தையின் வங்கிக் கணக்கை முடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஊழல் தடுப்பு ஆணையம் இன்று மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker