Latestமலேசியா

வாக்களிக்கும் வயதை 18-ஆகக் குறைக்க வேண்டும் – சைட் சடிக்

கோலாலம்பூர், ஜூலை. 6 – நாட்டின் தேர்தலில் வாக்களிக்கும் வயது வரம்பு 21-இல் இருந்து 18-ஆக குறைக்கப்பட வேண்டும் என இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் கூறினார்.

அதோடு, இதனை நாட்டின் 15-ஆவது பொதுத் தேர்தலின் போது செயல்படுத்த முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும் அதற்கு முன்னர் இளைய தலைமுறையினருக்கு அரசியலைப் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.

மேலும், பள்ளி மாணவர்களிடையே எவ்வாறு ஜனநாயக செயல்முறை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக்குடன் கலந்துரையாடப் போவதாக சைட் சடிக் சொன்னார்.

மற்ற நாடுகளைப் போல் மலேசியாவிலும் இடைநிலைப் பள்ளி மாணவர்களிடையே அரசியல் சார்ந்த வெளிப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker