Latestஉலகம்

குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள்:- உலக கால்பந்து இறுதி போட்டியை காண அழைப்பு!

பேங்காக்,ஜூலை.7- தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்களும் உயிருடன் மீட்கப்பட்டு ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து இறுதி போட்டியை காண வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் தம்-லுவாங் குகைக்குள் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் உயிருடன் இருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த 2 நீர் மூழ்கி வீரர்கள் கடந்த 9ஆம் தேதி உறுதி செய்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் விரைந்து மீட்கும் பணியில் தாய்லாந்தில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் (பிபா)

அமைப்பின் தலைவர் கியான்னி இன்பான்டினோ, தாய்லாந்து கால்பந்து சங்க தலைவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில் குகையில் சிக்கியுள்ள 13 பேரும் விரைவில் உயிருடன் மீட்கப்படுவார்கள் என தான் நம்புவதாகவும் அதற்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 13 பேரும் மீட்கப்பட்டு குடும்பத்தாருடன் இணைந்ததும் அவர்களின் உடல் ஒத்துழைத்தால் ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து இறுதிப் போட்டியினை காண வரலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக குகையில் சிக்கியுள்ள 13  பேருக்கும் ஆக்சிஜன் மற்றும் உணவு பொருட்களை கொண்டு சென்ற தாய்லாந்து முன்னாள் கடற்படை வீரர் சமன் குணன் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker