Latestமலேசியா

நஜிப் பேரக்குழந்தைக்கு ஆதரவாக மறியல்; எம்.ஏ.சி.சி, மகாதீர் மீது போலீஸ் புகார்

கோலாலம்பூர், ஜூலை.7- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் சுக்ரி அப்துல் மீதும் பிரதமார் துன் மகாதீர் மீதும் நஜிப் ஆதரவாளர்கள் நேற்றிரவு போலீசில் புகார் செய்துள்ளனர்.

நஜிப்பின் 10 மாத பேரக் குழந்தையின் சி.ஐ.எம்.பி வங்கிக் கணக்கை முடக்கியதன் காரணமாக, சுக்ரி மீது ஜாலான் டாங் வாஙீ போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அம்னோவுக்குச் சொந்தமான 200 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதன் காரணத்தையும் சுக்ரி தெளிவுப்படுத்தவில்லை என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரை அடுத்து, நஜிப் ஆதரவாளர்கள் சோகோ பேரங்காடிக்கு முன் கூடி மறியலில் ஈடுபட்டனர். வெண்ணிற சட்டை அணிந்திருந்த அந்த கும்பல், “எம்.ஏ.சி.சி பொய் சொல்கிறது”, “அடாம்மின் ராயா பணத்தைத் திருப்பிக் கொடு”, “அடாம்மின் காலணி எங்கே?” என எழுதப்பட்டிருந்த பதாகைகள் ஏந்தி மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே 1எம்டிபி விவகாரம் தொடர்பில் நஜிப் மீது கடந்த மூன்றாண்டுகளாக துன் மகாதீர் அவதூறு கூறி வருவதாக, அவர் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

நஜிப்புக்கும் அவரது குடும்பத்துக்கும் எதிரான பக்காத்தான் அரசின் செயலை சம்பந்தப்பட்ட நஜிப் ஆதரவு கும்பல் மனித உரிமை மீறல் என வகைப்படுத்தியுள்ளது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker