Latestவிளையாட்டு

அரையிறுதியில் குரோஷியா- இங்கிலாந்து மோதல்!

சோச்சி, ஜூலை. 8- உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியை ஏற்று நடத்தும் நாடான ரஷ்யா, தனது இலட்சக்கணக்கான உள்ளூர் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில், பெனால்டிக் கோல்களில் குரோஷியாவிடம் தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறியது.

காலிறுதி ஆட்டத்தில் 4-3 பெனால்டிக் கோல்களில் குரோஷியா வென்று அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றது. இதன் வழி அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா குழு இங்கிலாந்துடன் மோதவிருக்கிறது.

ரஷ்யாவுக்கும் குரோஷியாவுக்கும் இடையிலான ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே வழக்கமான ஆட்ட நேரத்தில் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரம் வழங்கப்பட்ட பின்னர் குரோஷியாவின் டுமாகோஜ் விடா, ஒருகோலைப் புகுத்தி தனது குழுவை 2-1 இல் முன்னிலைக்குக் கொண்டு வந்தார்.

எனினும், ஆட்டம் முடிய 8 நிமிடங்கள் இருக்கும் போது ரஷ்யாவின் மரியோ பெர்னாண்டஸ் ஒரு கொலை அடித்து 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமப்படுத்திய போது ரஷ்ய ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர்.

பின்னர் வெற்றியாளரை நிர்ணயிக்க வழங்கப்பட்ட தலா ஐந்து பெனால்டிகளில் 4 பெனால்டிகளை குரோஷியா கோலாக்கியது. ரஷ்யா 3 பெனால்டிகளை கோலாக்கியது.

இதனிடையே இதற்கு முன்பு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து குழு 2-0 என்ற கோல்களில் சுவீடனை வென்று அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றது. இங்கிலாந்தின் தற்காப்பு ஆட்டக்காரர் ஹர்ரி மெக்குய்ரே 30 ஆவது நிமிடத்திலும் டெலே அல்லி 58 ஆவது நிமிடத்திலும் கோல்களைப் போட்டனர்.

இந்த வெற்றியின் வழி 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக இங்கிலாந்து குழு உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்குத் தேர்வுப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker