Latestமலேசியா

உயர்க்கல்வி மாணவர் பேச்சுப் போட்டி: ‘பேசு தழிழா பேசு’- வென்றார் விஜய ரத்தினம்!

புத்ராஜெயா, ஜூலை. 8- 2018 ஆம் ஆண்டின் மலேசிய உயர்க்கல்வி மாணவர்களுக்கான ‘பேசு தமிழா பேசு’ பேச்சுப் போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்றில் மாபெரும் வெற்றியாளராக மலேசிய சபா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஜய ரத்தினம் இராமா வாகை சூடினார்.

இந்தப் போட்டியில் மலாயா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பாரு குட்டி இராமன் 2ஆம் நிலை வெற்றியாளராகவும் 3ஆம் நிலை வெற்றியாளர்களாக சுல்தான் அப்துல் ஹாலிப் ஆசிரியர் பயிற்சி கழகத்தைச் சேர்ந்த தேவேந்திரன் சுகுமாரும் திலிப் அகிலனும் வாகை சூடினார்.

அஸ்ட்ரோ வானவில் மற்றும் வணக்கம் மலேசியா நிறுவனத்தின் ஏற்பாட்டிலான உயர்க்கல்வி மாணவர்களுக்கான “பேசு தமிழா பேசு” எனும் மாபெரும் இறுதிச் சுற்று பேச்சுப் போட்டி , மேடைப் பேச்சு என்பது வீரமாக பேசுவது மட்டுமல்ல. மாறாக, சீரிய கருத்துகளை சுவாரஸ்யமாக எடுத்துரைத்து, பார்வையாளர்களைக் கட்டிப் போடும் ஓர் அற்புதக் கலை என்பதை நிரூபித்துள்ளது.

இன்றைய உயர்க்கல்வி மாணவர்களே நாளைய சமுதாயத் தலைவர்கள் . தாங்கள் கற்றுக் கொண்ட அறிவையும் கண்ணோட்டத்தையும் சமூகம் மீதான பார்வை குறித்த கருத்துக்களையும் பொதுவில் முன்வைக்கும் தைரியத்தையும் இளைஞர்களிடையே உருவாக்கும் வகையில் “பேசு தழிழா பேசு” எனும் பேச்சுப் போட்டி இவ்வாண்டு மூன்றாம் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த மே மாதம் இப்போட்டியின் தேர்வுச் சுற்று நடைபெற்ற போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டது, இது போன்ற மேடை பேச்சுத் துறையில் இளைஞர்களிடையே ஆர்வம் மேலோங்கி இருப்பதைக் காட்டியது.

தேர்வுச் சுற்றிலிருந்து 13 பேர் புத்ராஜெயாவில் நடந்த “பேசு தமிழா பேசு” போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்றுற்கு தேர்வாகினர்.

ஒரே தலைப்பில் தங்கள் கருத்துகளை ஒப்புவிக்கும் களமாக அல்லாமல் வெவ்வேறு கோணங்களில் அணுகி, சக போட்டியாளர்களின் கருத்தை மறுத்துப் பேசவும் விவாதம் செய்யும் களமாகவும் “பேசு தமிழா பேசு” போட்டி திகழ்ந்தது. போட்டியாளர்களின் அனல் பறக்கும் கருத்துக்களைப் பார்வையாளர்கள் கை தட்டி ரசித்தனர்.

இப்போட்டியின் நடுவர்களாகத் திகழ்ந்த தனியார் நிறுவனத்தின் உயர் அதிகாரி திரு நவராஜன் சுப்ரமணியம், முன்னாள் தொலைக்காட்சி வாசிப்பாளர் மற்றும் தனியார் கல்லூரி விரிவுரையாளரான டாக்டர் ஹரிகிருஷ்ணன், முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் திருமதி சுகன்யா சுதானந்தன் ஆகியோர் போட்டியாளர்களுக்குப் புள்ளிகள் வழங்கியதோடு அவர்களின் கருத்துகள் மீதான கேள்விகளையும் முன் வைத்தனர்.

மாபெரும் இறுதிப் போட்டியில் கடைசி சுற்றில் தேர்வு பெற்ற நான்கு போட்டியாளர்களும் சமுதாயத்திற்கு அவசியமான தலைப்பான

“மண முறிவால் அதிகம் பாதிக்கப்படுவது எந்த தரப்பினர்?”
-என்ற விவாதத் தலைப்பில்-

கணவன்- மனைவி- பிள்ளைகள் -பெற்றோர்கள்

எனத் தங்களின் தரப்பு விவாதக் கருத்துக்களை முன் வைத்தனர். இந்தப் பேச்சரங்கத்தின் இறுதியில் வாகை சூடியவர்களின் விபரம் வருமாறு:

மாபெரும் வெற்றியாளர்:
விஜயரத்தினம் இராமா,
மலேசிய சபா பல்கலைக்கழகம்.

2ஆம் நிலை வெற்றியாளர்:
பாரு குட்டி இராமன்,
மலாயா பல்கலைக்கழகம்.

3ஆம் நிலை வெற்றியாளர்:
தேவேந்திரன் சுகுமார்,
சுல்தான் அப்துல் ஹாலிம் ஆசிரியர் பயிற்சி கழகம்.

3ஆம் நிலை வெற்றியாளர்:
திலிப் அகிலன்,
சுல்தான் அப்துல் ஹாலிம் ஆசிரியர் பயிற்சி கழகம்

“பேசு தமிழா பேசு” இறுதிச் சுற்றுப் போட்டி நிகழ்வில் நீர் ,நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், அஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சியின் தலைவர் திரு. முருகையா வெள்ளை, ‘வணக்கம் மலேசியா’ நிறுவனத்தின் இயக்குனர் திரு. தியாகராஜன் முத்துசாமி, அஸ்ட்ரோ வானவில்’ பிரிவுத் தலைவர் திரு.மகேஷ்வரன் பாலகிருஷ்ணன், உயர்க்கல்வி இலாகாவின் மாணவர் மேம்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

2018ஆம் ஆண்டுக்கான இந்த வெற்றியாளர்களில் மூவர், இவ்வாண்டு மியான்மார் யங்கூன் நகரில் நடைபெறவிருக்கும் மூன்றாவது அனைத்துலக ‘பேசு தமிழா பேசு’ போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து பங்கேற்கும் பெரும் சிறப்பைப் பெறவிருக்கின்றனர்.

இவ்வாண்டின் செப்டம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் 3 ஆவது அனைத்துலக “பேசு தமிழ பேசு” பேச்சுப் போட்டியில் 6 நாடுகள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker