Latestமலேசியா

அன்னிய தொழிலாளர்; நடவடிக்கை தொடரும்! – குடிநுழைவு

கோலாலம்பூர், ஜூலை.9- சட்டவிரோதமாக நாட்டில் தங்கி இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் குடிநுழைவு இலாகாவின் செயலை சில அமைப்புகள் விமர்சிப்பது நியாயமற்ற செயல் என்று குடிநுழைவு துறை கூறியுள்ளது. மேலும் அது தனது கடமையை தொடர்ந்து செய்யும் என்றார் அவர்.

வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள், நாட்டின் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று குடிநுழைவு துறையின் பொது இயக்குநர் டத்தோ முஸ்தாபார் அலி கூறினார்.

“நாட்டிலுள்ள சில வேலைகளை செய்ய வெளிநாட்டு தொழிலாளர்களின் உதவியைத் தான் நாம் நாடுகிறோம் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள், சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

“கடமையை செய்யும் குடிநுழைவு இலாகா அதிகாரிகளை கடிந்துக் கொண்டு, சட்ட விதிமுறைகள் சற்றுத் தளர்த்தப் பட வேண்டும் என்று சில அமைப்புகள் கேட்டுக் கொள்வது நியாயமற்ற செயலாகும். நாங்கள் நாட்டின் விதிமுறையை தான் பின்பற்றுகிறோம்” என்று முஸ்தாபார் அலி சொன்னார்.

வெளிநாட்டு தொழிலாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் குடிநுழைவு துறையின் செயலை சாடி மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத் தலைவர் ஜோர்ஜ் வாருகேசே கருத்துரைத்திருந்தார். அவருக்கு பதிலளிக்கும் வகையில், முஸ்தாபார் அலி அவ்வாறு பேசினார்.

“அளவுக்கு அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டில் இருந்தால், குடிநுழைவு இலாகா அதிகாரிகள் தங்களின் வேலையை ஒழுங்காக செய்யாத காரணத்தால், வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்று எங்களைதான் மற்றவர்கள் குறை கூறுவார்கள்” என்று அவர் கூறினார்.

வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்னர், சில விதிமுறைகள் கடைபிடிக்கப் பட வேண்டும் என்று நாட்டின் சட்டத் திட்டம் கூறுகிறது. உள்துறை அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் அந்தச் சட்டத் திட்டங்களை அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

“நாட்டின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் காக்கப் பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, குடிநுழைவு இலாகா தனது கடமையை தவறாமல் செய்யும்” என்று முஸ்தாபார் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker