Latestஉலகம்

இங்கிலாந்து ரசிகர்கள் மீது போலீஸ் தாக்குதல் – (VIDEO)

மாட்ரிட், ஜூலை.9- உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஸ்பெயின் தெருக்களில், கொண்டாடிய பிரிட்டன் ரசிகர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

ரஷ்யாவில் இங்கிலாந்து- சுவீடன் அணிகளுக்கு இடையேயான கால்பந்து காலிறுதி போட்டியில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் அணியை வீழ்த்தியது.

சுமார் 28 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக உலகக் கிண்ன அரையிறுதி போட்டிக்கு இங்கிலாந்து அணி முன்னேறி இருப்பதை கொண்டாடும் விதமாக ,இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியினை கொண்டாட்டங்களின் வாயிலாக வெளிப்படுத்தினர்.

அந்த வகையில் இங்கிலாந்து ரசிகர்கள் ஸ்பெயின் தெருக்களில் வெற்றியினை கொண்டாடிய போது ஒரு கட்டத்தில் எல்லை மீறும் வகையில் செயல்பட்டதால் கூட்டத்தை கலைக்கும் விதத்தில் ஆயுதமேந்திய போலிசார் குவிக்கப்பட்டனர்.

அப்பொழுது ஒரு நபர் தனது குழந்தையை தோளில் சுமந்தபடி தெருவில் நடந்து சென்றார். முதலில் அங்கிருந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
ஆனால் போலிசாரின் உத்தரவையும் மீறி நடக்க முயன்றதால் அவர் மீது தடியடி நடத்தினர்.

இதனை பார்த்த மூன்று இங்கிலாந்து ரசிகர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீசாரை சுற்றி வளைத்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்படவே ரப்பர் குண்டுகளை வைத்து போலீசார் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker