Latestசினிமா

‘என் காதலை நானே முறித்தேன்!’ -நக்மா மனம் திறந்தார்!

மும்பை, ஜுலை, 9- என் காதலை நானே முறித்துக் கொண்டேன். நல்லவிதமாக, மகிழ்ச்சியாகவே காதலைப் பிரிந்தேன் என்று நடிகை நக்மா மனம் திறந்து கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் கங்குலியுடனான காதல் முறிந்ததற்கான காரணம் குறித்து நடிகை நக்மா இப்போதுதான் வெளிப்படையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.

2003-ஆம் ஆண்டு வாக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த கங்குலியுடன் அதிகம் இணைத்து பேசப்பட்டவர் நடிகை நக்மா.

இருவரும் காதலிப்பதாக வெளிவந்த செய்திகள் தான் அன்றைய
காலக் கட்டத்தின் பரபரப்பு செய்தி. இந்திய அணியின் கேப்டனாக இருந்த கங்குலியும் தென்னிந்திய சினிமாவில் அப்போது புகழின் உச்சத்தில் இருந்த நடிகை நக்மாவும் காதலிப்பதாக தகவல் பரவின.

இருவரும் வெளியே சுற்றித் திரிகிறார்கள் என்று பரபரப்பான செய்தியை அவ்வப்போது ரசிகர்களுக்கு தீனியானது. ஆனால், நக்மாவுடனான காதலுக்கு முன்பே கங்குலிக்கு திருமணம் ஆகியிருந்தது.

கங்குலி 1997 ஆம் ஆண்டு திருமணம் ஆகிவிட்டது. எனினும் கங்குலிக்கும் நக்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது உண்மைதான். பின் இருவரும் பிரிந்து விட்டனர்.

இது தொடர்பாக நக்மா இப்போது அளித்துள்ள விளக்கம் வருமாறு:

“கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை சரியாக அமையாத காலத்தில் அவர் பின்னடைவை சந்தித்திருந்தார். அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தன.
மேலும் அவர் சரியாக ஆடாததற்கு என்னுடனான உறவு காரணமாக சொல்லப்பட்டது.

எனவே இருவரின் உறவு மற்றும் பழக்கம் யாருடைய சொந்த வாழ்க்கையையும் பாதித்து விடக்கூடாது என முடிவெடுத்தேன். பிரிந்தேன். நல்ல விதமாகவே பிரிவதற்கு அவரைக் கேட்டுக் கொண்டேன். மகிழ்ச்சியுடனே உறவை முறித்துக் கொண்டோம். எனினும் அவர் மீது இன்னமும் மிகப்பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன்” என்று நடிகை நக்மா தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker