Latestவிளையாட்டு

சாம்பியன் ஆக ‘எலிகேட்டர்’அகிலன் இலக்கு

கோலாலம்பூர், ஜூலை.9- புக்கிட் ஜாலில் அக்ஸியாத்தா அரங்கில் வரும் ஜூலை 13-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘வெட்ரல் வெயிட் ஓன் சாம்பியன்’ போட்டிக்கு நமது அகிலன் தாணி உட்பட மூன்று தேசிய கலப்பு தற்காப்புக் கலை வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். அந்த போட்டியில் அகிலன் தாணியும் சுவீடனின் ஸெபஸ்தியன் காடேஸ்தாமும் மோதவிருக்கும் போட்டி முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.

கடந்தாண்டு 23 வயது அகிலன் தாணி 32 வயதான அமெரிக்காவின் பென் அஸ்க்ரென்னுடன் மோதி தோல்வியுற்றிருந்தாலும், அத்தோல்வியே இம்முறை தனக்கு உத்வேகத்தை அளித்திருப்பதாக, அகிலன் தெரிவித்துள்ளார். அதனால், யாருடன் மோதினாலும் சரி சாம்பியன் பட்டம் வெல்வதே தமது இலக்கு என அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, நமது வீரர் கேனு சுப்பா, சீனாவின் ஸீ சாவ்வை ‘ஃபேதர் வெயிட்’ போட்டியில் மோதவுள்ளார்.

அவரை அடுத்து, நாட்டின் இளம் பெண் கலப்பு தற்காப்புக் கலை வீராங்கனையான ஜிஹின் ராட்சுவான், இரண்டாவது முறையாக இப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். 18 வயதான ஜிஹின், இம்முறை இந்தோனேசியாவின் பிரிசில்லா ஹெர்தாத்தி லும்பானைச் சந்திக்கிறார். கடந்தாண்டு, அவர் இந்தியாவின் பூஜா தோமரைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker