Latestஉலகம்

கோர விபத்து : ஒரே குடும்பத்தில் தந்தை, நான்கு மகள்கள் பலி!

வாஷிங்டன், ஜூலை 9- அமெரிக்காவில் நடந்த கார் விபத்தொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் நான்கு மகள்கள் பரிதாபமாக பலியாகினர்.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தை சேர்ந்தவர் ஹோடி ரினிடிட். இவர் தன்னுடைய மனைவி மற்றும் நான்கு மகள்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 4 மணியளவில் நியூ-வார்க் நகரின், ரூட்-1 சாலையில் டிரக்கின் மீது மூன்று கார்கள் தொடர்ச்சியாக மோதியன. இதில் ஒரு காரில் பயணித்த தந்தை உட்பட நான்கு மகள்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட தாய் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டிரக் ஓட்டுநருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுலா சென்று திரும்பிய போதே இக்கோர விபத்து நிகழ்ந்ததாக ஹோடி ரினிடிட்டின் சகோதரர் தெரிவித்தார்.

கடவுள் மீது தன் சகோதரருக்கு அதீத நம்பிக்கை உண்டு என்றும் கண் மூடி திறப்பதற்குள் நிகழ்ந்த இச்சம்பவத்தால் உருக்குலைந்து விட்டார்.
மேலும் அவருடைய நான்கு மகள்களின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து விட்டதாக அவர் கண்ணீர் மல்கக் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker