Latestமலேசியா

ஜெர்மனியின் அரசியல் நிதி முறை: ‘மலேசியா ஆராய்கிறது! –மகாதீர்

கோலாலம்பூர், ஜூலை. 9- மத்திய அரசாங்கம் ஜெர்மனி அரசாங்கம் வழங்கும் நிதியுதவி வழிமுறைகளை மலேசியா ஆராய்ந்து வருவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி நாட்டின் மத்திய அரசாங்கம் அந்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த நிதிகளை தான் அந்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் உபயோகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி நாட்டின் அந்த அணுகுமுறையை மலேசியா அமல்படுத்தலாமா என்ற அடிப்படையில், அந்த நாட்டின் அரசியல் நிதி மாதிரிகளை மத்திய அரசாங்கம் கவனித்து வருவதாக மகாதீர் அறிவித்தார்.

“சில நாடுகளில், அரசியல் கட்சிகளுக்கான நிதித் தொகையை அந்த நாட்டின் மத்திய அரசாங்கங்கள் தான் வழங்கி வருகின்றன. அந்த அணுகுமுறையை நாமும் அமல்படுத்தலாம் என்ற அடிப்படையில், அது குறித்து மேலும் தெரிந்துக் கொள்ள நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்று அவர் சொன்னார்.

ஆனால், அமெரிக்காவைப் போன்று நாடாளுமன்ற தீர்மானங்களை ஆதரிக்கும் வகையில் அரசியல்வாதிகளை தூண்டக் கூடிய ‘மூன்றாம் தரப்புகளை’ மலேசிய ஆதரிக்காது என்று மகாதீர் கூறினார்.

அந்த மூன்றாம் தரப்புகளுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கும். அந்தத் தரப்பினர், அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் செனட்டர்கள், நாடாளுமன்றத்தில் தாக்கப் பட்டுள்ள தீர்மானங்களை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் வகையில் தூண்டுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“என்னை பொருத்தவரையில் அது ஊழலை தூண்டும் முயற்சியாகும். அதனை நான் ஆதரிக்க மாட்டேன். மலேசியா அந்தச் செயலை ஆதரிக்காது” என்று மகாதீர் திட்டவட்டமாக கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker