Latestஇந்தியா

‘நானும் கடத்தப் பட்டேன்’ -பார்வதி பகீர் தகவல்

திருவனந்தபுரம், ஜூலை.9- நடிகைகள் கடத்தப்படுவது ஒன்றும் இன்று புதிதல்ல. பல சந்தர்ப்பங்களில் நடிகைகள் கடத்தப்பட்டுள்ளார்கள். சில விஷயங்கள் வெளியே வந்தன. பல விஷயங்கள் வெளியே வராமல் போயின. நானும் அட்டியொரு கடத்தலில் பாதிகப்பட்ட நடிகை தான் என்று பிரபல நடிகையான பார்வதி பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் கடத்தப்பட்ட நடிகையின் நெருங்கிய தோழியும் பிரபல நடிகையுமான பார்வதி, தானும் அது போன்ற சம்பவத்தில் சிக்கினேன் என்று பேட்டியளித்து பரபரப்பு
ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

முன்பு கடத்தப்பட்ட பிரபல நடிகை எனது நெருங்கிய தோழி. அவர் கடத்தப்பட்ட செய்தி அறிந்து நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். அவளுக்கு அப்போது யாரும் உதவ முன்வரவில்லை. இது எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.

ஏனெனில், அது போன்ற ஒரு கடத்தல் சம்பவம் எனக்கும் நடந்தது. மலையாள சினிமா உலகைச் சேர்ந்தவர்களே, அதைச் செய்தார்கள். அவர்கள் யார் என்பதை இப்போது குறிப்பிட்டு அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தரமுடியும்.

ஆனால், அதை நான் விரும்பவில்லை. அவர்கள் “கிரிமினல்கள்” எதையும் செய்யத் துணிந்தவர்கள்.அந்த சம்பவத்திற்காக நான் அழுது கொண்டு மூலையில் உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. அதைவிட்டு வெளியே வந்து விட்டேன்.

இது போன்ற சம்பவங்கள் குறித்து பெண்கள் விழிப்புடன்
பாதுகாப்புடனும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது இதைச் சொல்கிறேன். இது போன்ற சம்பவங்கள் சினிமாவில் சர்வ சாதரணமாக நடக்கின்றன. பெண்களை சினிமாவில் போக பொருளாகத்தான் பார்க்கிறார்கள்.

-இவ்வாறு நடிகை பார்வதி கூறியுள்ளார். இவரது இந்தக் கருத்து மலையாள சினிமா உலகில் மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker