Latestமலேசியா

பாக்கி ஜாமின் தொகையைச் செலுத்தினார் நஜிப்பின் மகள்

கோலாலம்பூர், ஜூலை.9- நஜிப் ஊழல் வழக்கின் ஜாமின் தொகையின் பாக்கியைச் செலுத்துவதற்காக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் மகள் நூர்யானா நஜ்வா இன்று கோலாலம்பூர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

காலை மணி 10.04-க்கு நீதிமன்றத்தை வந்தடைந்த நூர்யானாவும் அவரது கணவர் டேனியர் கேஷிக்பாயெவ்வும் பாக்கி பணம் 5 லட்சம் ரிங்கிட்டை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்தார்.

சென்ற வாரம் ஜூலை 4-ஆம் தேதி, நஜிப் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். 1எம்டிபி, எஸ்.ஆர்.சி நிறுவனங்களின் பண மோசடி விவகாரம் தொடர்பில் அவர் மீது 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணைக் கோரிய நஜிப்பை 10 லட்சம் ரிங்கிட் ஜாமின் உத்தரவாதத்தின் பேரில் விடுதலை செய்ய நீதிபதி அனுமதி வழங்கினார்.

ஜாமின் தொகையை இரு தவணைகளாகச் செலுத்த அனுமதி கோரிய நஜிப், அன்றைய நாளே 5 லட்சம் ரிங்கிட்டைச் செலுத்தினர். எஞ்சிய 5 லட்சம் ரிங்கிட்டைச் செலுத்த இன்று மாலை மணி 3 வரையில் அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker