Latestமலேசியா

ஸாகிரை இந்தியாவுக்கு அனுப்பாதது ஏன்? இரகசிய ஒப்பந்தமா? – பி.ராமசாமி

ஜோர்ச் டவுன், ஜூலை.9- இந்தியாவால் தேடப்பட்டு வந்த சர்ச்சைக்குரியை சமய போதகர் ஸாகிர் நாய்க்கை அரசாங்கம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பாததை அடுத்து, மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இது தொடர்பில் இரகசிய ஒப்பந்தம் ஏதும் உள்ளதா என ஜசெக தலைவர் பேராசிரியர் பி.ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸாகிரை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேசியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் திருமூர்த்தி ஏற்கெனவே தம்மிடம் கூறியிருந்ததைச் சுட்டிக் காட்டிய ராமசாமி, ஏன் அந்நடவடிக்கையை இந்திய அரசு இன்னும் தள்ளிப் போடுகின்றதென அவர் மற்றொரு கேள்வியையும் கேட்டுள்ளார்.

ஏதும் பிரச்சனையை ஏற்படுத்தாத வரையில், மலேசிய குடியுரிமை உடைய ஸாகிரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் போவதில்லையென துன் மகாதீர் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். அதன் பிறகு, துன் மகாதீரும் ஸாகீரும் மறுநாள் சந்தித்து கொண்டதும் இந்த இரண்டுமே தமக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்ததாக ராமசாமி தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்நாட்டில் பல ஆண்டுகளாக குடியுரிமை கிடைப்பதற்காக காத்திருக்கும் வேளையில், ஸாகீருக்கு குடியுரிமை எவ்வாறு கிடைத்தது என்று அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker