Latestமலேசியா

அடுக்குமாடி கீழ் தளத்தில் கைக்குழந்தையின் சடலமா?

அம்பாங், ஜூலை. 10 – பண்டான் இண்டானில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் ஒரு பெண் கைக்குழந்தையின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.

அது தொடர்பாக ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு கிடைத்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஹம்ஸா அலியாஸ் கூறினார். விசாரணையின் தொடக்கத்தில் அந்தக் கைக்குழந்தை அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்திலேயே உயிரிழந்து கிடந்தது.

அக்குழந்தையின் சடலம் சவப் பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

அந்த குழந்தை யாருடையது? யார் குழந்தையை அங்கு வீசியது? இது குறித்து போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker