Latestசினிமா

சினிமாவுக்கு ஒரு ‘கும்பிடு’! ஒதுங்குகிறார் சமந்தா!

சென்னை, ஜூலை.10- தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி  நடிகை சமந்தா இன்னும் ஓரிரு மாதங்களில் சினிமாவுக்கு ‘குட் பை’ சொல்லப் போவதாக தகவல் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் “விண்ணைத் தாண்டி வருவாயா” படத்தின் மூலம் 2010ஆம் ஆண்டில் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை சமந்தாவுக்கு அவர் நடித்த படங்கள் பெரும்பாலும்  நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததால் ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து கடந்த ஆண்டு கைப்பிடித்தார் சமந்தா, திருமணம் முடிந்து சில மாதங்களுக்குப் பின் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

திருமணத்திற்கு பின் பெரும்பாலான நடிகைகளுக்கு சரிவே ஏற்படும் என்றாலும் சமந்தா நடிப்பில் வெளியான ‘மகாநதி’, ‘இருப்புத் திரை’, ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்கள் வெற்ரிகண்டன. இந்நிலையில் நடிகை சமந்தா, திரையுலகில் இருந்து ஓய்வுப் பெறப் போவதாக தகவல் வெளியாகிவுள்ளது.

“எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதுவே என் உலகமாக மாறிவிடும்” என ஏற்கனவே ஒரு முறை சமந்தா கூறியிருந்ததார். அதன் பின்னர் சினிமாவுக்கு முழுக்குப் போடுவார்.

இதனிடையே திருமணத்திற்குப் பின், பிற நடிகர்களுடன் சமந்தா மிகவும் நெருக்கமாக நடிப்பதும், முத்தக்காட்சியில் நடிப்பதும் அவரது கணவர் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என்றும் இதனை புரிந்து கொண்டே சினிமாவில் இருந்து ஒதுங்க சமந்தா முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சமந்தாவுக்கே வெளிச்சம்!

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker