Latestஉலகம்

செவ்வாய்க் கிரகத்திற்கு பயணம்: 17 வயது பெண்ணுக்கு நாசா பயிற்சி!

வாஷிங்டன், ஜூலை.10- அமெரிக்காவைச் சேர்ந்த அலிஸ்ஸா கார்சன் என்ற 17 வயது பெண்ணிற்கு செவ்வாய்க் கிரகத்திற்கு பயணம் செய்வதற்காக நாசா தீவிர பயிற்சியளித்து வருகிறது.

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் அலிஸ்ஸா கார்சன், செவ்வாய்க் கிரகத்திற்கு முதல் முறையாக மனிதரை அனுப்பும் திட்டத்திற்கு நாசா இவரைத் தேர்வு செய்துள்ளது.

அதன்படி அலிஸ்ஸா கார்சன் 13 வயதிலிருந்தே விண்வெளிக்கு செல்வதற்கான பயிற்சியை நாசா தொடங்கி விட்டது. வரும் 2033 ஆம் ஆண்டில் அலிஸ்ஸா கார்சன் செவ்வாய்க் கிரகத்திற்கு சென்று வருவார் என்று நாசா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாசாவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அலிஸ்ஸா கார்சனுக்கு செவ்வாய்க் கிரகப் பயணத்திற்கு இப்போது சரியான வயது தான் ஆகிறது. உண்மையில் ஒரு விண்வெளி வீராங்கணையாக வலம் வருவார்.

அதற்கு தற்போது சரியான முடிவு எடுத்துள்ளார். அதற்கு நாங்கள் சரியான வழிமுறைகளை  பயிற்சி கொடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அலிஸ்ஸா தந்தை கூறுகையில், “விண்வெளி ஆபத்துக்கள் குறித்து அவரிடம் கலந்து ஆலோசனை செய்துள்ளேன்.  அவளது முடிவில் திடமாகவும் 2033இல் தனது கனவுகளை நிறைவேற்றவும் முடியும் என்ற நம்பிக்கை உள்ளவளாகவும் இருக்கிறாள் என்று சொன்னார்.

தொலைக்காட்சியில் விண்வெளிப்பாதை கார்ட்டுன் கதாபாத்திர படங்களை பார்த்து தான் அது போல விண்வெளிக்கு செல்ல வேண்டுமென அவளின் ஆசையை தூண்டியது. மேலும் அலிஸ்ஸா தன் குழந்தை பருவத்தை ஒரு யதார்த்தமான கனவைப் பற்றிய வாழ்வின் சிறந்த முடிவை எடுத்துள்ளார்.
அவளது விருப்பத்தை அறிந்து முழு ஊக்கம் அளித்து வருகிறோம்” என்றார்.

அலிஸ்ஸா, கடந்த  12 ஆண்டுகளாக ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் நடந்த நாசா விண்வெளி முகாம்களில் கலந்து கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முடிவின் உறுதிபாட்டை பார்த்து பல்வேறு அனைத்துலக விண்வெளி நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன என தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் அலிஸ்ஸா கார்சன் தான் பயிற்சி செய்யும் புகைப்படம், வீடியோ போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker