Latestமலேசியா

ஜோ லோவை கைது செய்ய மக்காவின் சமிக்ஞைக்காகக் காத்திருக்கிறோம் – ஐஜிபி

கோலாலம்பூர், ஜூலை.10- 1எம்டிபி சர்ச்சையின் தொடர்பில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் ஜோ லோ மக்காவில் ஒளிந்திருப்பதை அடுத்து அவரை கைது செய்வதற்கு, மக்காவ் அரசின் பதிலுக்காகக் காத்திருப்பதாக தேசிய போலீஸ் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புஸி தெரிவித்தார்.

ஜோ லோவைத் தேடுவதற்கு உதவுமாறு மக்காவ் போலீசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார். மக்காவை தவிர்த்து, சீனா, ஹாங் கோங், இந்தோனேசியா, மியன்மார், தைவான் ஆகிய நாடுகளின் உதவியும் நாடப்பட்டுள்ளது என்றார் அவர்.

ஜோ லோ மக்காவுக்கு தப்பித்தோடிவிட்டதாக கடந்த ஜூலை 6-ஆம் தேதியன்று செய்திகள் வெளியாகியிருந்தன. ஜோ லோவைத் தேட ஹாங் கோங்கிற்கு அனுப்பப்பட்டிருந்த போலீஸ் குழுவின் வாயிலாக இந்த தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜோ லோவின் அனைத்துலக கடப்பிதழ் முடக்கப்பட்டுவிட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோஶ்ரீ முஸ்தாபார் அலி கடந்த ஜூன் 15-ஆம் தேதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பில், எம்.ஏ.சி.சி தலைவர் டத்தோஶ்ரீ முகமட் சுக்ரி அப்துல் கேட்டுக்கொண்டதை அடுத்து 36 வயது ஜோ லோவின் கடப்பிதழ் முடக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker