Latestசினிமா

நடிகர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்!

விசாகப்பட்டினம், ஜூலை.10- முழு நேர அரசியலில் குதித்துள்ள தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தெலுங்கு படவுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் பவன் கல்யாண்.

ஒரு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர். திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண்- கீர்த்தி சுரேஷ் நடித்து இவ்வாண்டு வெளிவந்த ‘அஞ்ஞானவாசி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

‘ஜன சேனா’ என்ற அரசியல் கட்சியை 2014 ஆம் ஆண்டு தொடங்கினார் பவன். இப்போது முழு நேர அரசியலில் குறித்து விட்டார். இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் தன் கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்.

சில மர்ம நபர்கள் காரில் விபத்தை ஏற்படுத்தி அல்லது குண்டு வைத்து கொலை செய்து விடுவோம் என செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக தெரிவித்தார். ஆனால் கொலை மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுபவன் நான் இல்லை என திட்டவட்டமாக பவன் கல்யாண் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker