Latestமலேசியா

ஆசிட் வீச்சுக்கு ஆளான ஆடவர் புர்சா மலேசியா பணியாளரா?

கோலாலம்பூர், ஜூலை.11 – நேற்று மாலை ஜாலான் ராஜா சூலான் அருகே ஆசிட் வீச்சுக்காளான ஆடவர் புர்சா மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார் என தெரிய வந்துள்ளது. அதனை போலீஸ் தரப்பு தெரிவித்ததாக Malay Mail செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிட் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள நோக்கம் இன்னும் தெரியவில்லை. ஏனில், ஆசிட்டை வீடிய இரு ஆடவர்கள் இன்னும் பிடிபடவில்லை. மேலும், ஆசிட் வீச்சு தாக்குதலுக்கும் அவ்வாடவரின் பணிக்கும் தொடர்பு இருக்க முடியும் என்ற சாத்தியத்தையும் போலீஸ் மறுக்கவில்லை.

அதே வேளையில், ஆசிட் வீச்சுக்கு ஆளான 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரின் வாக்குமூலத்தைப் பெற போலீஸ் இன்னும் காத்திருக்கிறது. அதோடு, சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

அச்சம்பவம் தொடர்பாக போலீசார் நேற்று மாலை 6.35 மணிக்கு ஒரு பெண்ணிடம் இருந்து அவசர அழைப்பு பெற்றதாக அவர் தெரிவித்தார். நீல நிற யமாஹா 123 மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள் ஒரு AUDI காரின் கண்ணாடியை உடைத்து பாதிக்கப்பட்ட நபர் மீது ஆசிட் திரவத்தை வீசினர்.

அவர்களின் செயலால் அதிர்ச்சியடைந்த அந்நபர் உடனடியாக தனது காரிலிருந்து வெளியேறி அருகிலிருந்த பேருந்து நிறுத்துமிடத்திற்கு ஓடிச் சென்று தனது ஆடைகளை கழற்றியவாறே உதவிக் கேட்டுள்ளார். பின்னர் பொதுமக்களின் உதவியோடு அவர் அருகிலிருந்த துங் ஷின் மருத்துவமனைக்கு விரைந்துக் கொண்டு செல்லப்பட்டார்.

தொடக்கக்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர் தனது காரை தனியாக செலுத்தி வந்ததாகவும் சந்தேக நபர்கள் கறுப்பு நிற ஜாக்கெட்டுகளும் முகம் மறைக்கும் தலைக்கவசங்களையும் அணிந்திருந்தனர் எனத் தெரிய வந்துள்ளதாக ரூடி அப்துல்லா கூறினார். அதோடு, அச்சம்பவம் அருகிலிருந்த ஏதேனும் கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளதா எனவும் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker