உலகம்

உலகின் மிகப் பெரிய குடும்பம்! உலகச் சாதனை கண்ட அப்பா!

உக்ரைன், ஜூலை.11- உக்ரைன் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உலகின் மிகப்பெரிய குடும்பம் தங்களது எனக் கூறி கின்னஸ் உலகச் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளார்.

உக்ரைன் வசிக்கும் 87 வயதான பவெல் செமினியூக், தமது இளமைக்காலம் தொட்டே மிகப் பெரிய குடும்பம் குறித்து கனவு கண்டு வந்தார் இவர். திருமணம் முடிந்து 13 பிள்ளைகளை பெற்றெடுத்தார் இவரது மனைவி.

பல திருமணங்கள் மற்றும் பல பிறப்புகள் கண்ட இவரது குடும்பத்தில் தற்போது 346 உறுப்பினர்கள் உள்ளனர். மட்டுமின்றி இவரது குடும்பத்தில் மிகவும் வயது குறைவான நபருக்கு வயது 2 வாரங்கள் தான் ஆகின்றன.

டேசா ஒப்லட்ஸ் மாநிலத்தில் ஒரு குட்டி கிராமத்தில் குடியிருக்கும் பவெல் செமினியூக், தமக்கு பிறந்த 13 பிள்ளைகளால் தாம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர் என எப்போதும் கூறி வந்துள்ளார்.

ஆனால், தற்போது அவருக்கு 127 பேரப்பிள்ளைகள் உள்ளனர். மட்டுமின்றி 203 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர்.மேலும் அவரது கொள்ளுப் பேரப் பிள்ளைகளுக்கும் தற்போது 3 பிள்ளைகள் உள்ளனர்.

முன்னாள் கட்டுமானத் தொழிலாளியான செமினியூக்கு இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், தமது பேரப்பிள்ளைகள் -கொள்ளுப் பேரப்பிள்ளகளின் பெயர்களை நினைவில் வைத்திருப்பது மட்டுமே கடினம் எனக் கூறியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் குடும்பத்தில் ஒரு திருமணம் நடைபெறும் போது எஞ்சிய குடும்ப உறுப்பினர்கள், அவர்களுக்கான ஒரு குடியிருப்பை கட்டுவதில் மும்முரமாகி விடுவார்கள். தமது பேரப்பிள்ளைகளும் கொள்ளுப் பேரப்பிள்ளகளும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருவது தமக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது என பவெல் செமினியூக் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker