Latestமலேசியா

கல்லறைக் கல்லில் நஜிப்பின் புகைப்படமா? போலீசில் புகார்!

ஜோர்ஜ் டவூன், ஜூலை. 11- சீனக் கல்லறை ஒன்றின் நினைவுக் கல்லின் மீது முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் புகைப்படம் ஒட்டி, அதனை முகநூலில் பகிரப் பட்ட செயலுக்கு எதிராக, பினாங்கு மாநிலத்திலுள்ள அரசியல் கட்சி ஒன்று போலீஸ் புகார் செய்தது.

சீனர் கல்லறை ஒன்றில் நஜிப்பின் புகைப்படம் ஒட்டப் பட்டு, அந்தக் கல்லறைக்கு முன்புறம் பழங்கள் வைக்கப் பட்டுள்ள புகைப்படம் ஒன்று முகநூலில் பரவலானது. அதற்கு எதிராக பி.எஃப்.பி எனப்படும் பினாங்கு முன்னணி கட்சி போலீஸ் புகார் கொடுத்துள்ளது.

“அவ்வாறான செயல்கள் முன்னாள் பிரதமரை சாபமிடும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாது, அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் அவமானத்தை தேடித் தரும் வகையிலும் அந்தப் புகைப்படம் கல்லறையில் ஒட்டப் பட்டுள்ளது” என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவு உறுப்பினர் ஏகன் தியோ கியான் லியாங் கூறினார்.

“சீனச் சமுதாயத்தினர் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விளையாட்டாக கருதி சிலர் அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், அச்செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. இது வெவ்வேறு மதங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கலாம்.

“அந்தப் படத்தில், இறந்தவர்களுக்குச் செலுத்த வேண்டிய நன்கொடையை செலுத்தி விட்டீர்களா? என்று கேட்கப் பட்டுள்ளது. ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கட்டும். ஆனால், நாம் அனைவருக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்று தானே பள்ளியில் பயின்றோம்?” என்று ஏகன் கேள்வி எழுப்பினார்.

“ஒருவரை இவ்வாறு அவமதிக்க வாய்ப்புகள் வழங்கப் படக் கூடாது. ஆதலால், போலீசார் அந்த முகநூல் பக்கத்திற்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 

L

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker