Latestஇந்தியா

காதலிக்கு திருமணம்! மண்டபம் முன் தீக்குளித்த காதலன்!

வந்தவாசி, ஜூலை.11- காதலியின் திருமண தினத்தன்று மண்டபத்தின் முன்பு தீக்குளித்து காதலன் தற்கொலை செய்துக் கொண்டார். சென்னையைச் சேர்ந்தவர் சந்துரு (வயது 28) ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

தான் வசித்த பகுதியில் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்து வந்துள்ளார். அவரையே திருமணம் செய்து கொண்டு இனிமையாக வாழ வேண்டும் என்று கனவுகளை கண்டு வந்தார்.

ஆனால், அந்தப் பெண் வீட்டாரோ, வந்தவாசியை சேர்ந்த வேறோர் இளைஞருக்கு அந்தப் பெண்ணை மணம் முடிக்கப் பேசி முடித்து விட்டனர். அவர்கள் இருவருக்கும் கடந்த 2ஆம் தேதி திருமணமும் முடிவானது. அதன்படி திருமணத்திற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வந்தது.

இந்தத் தகவல் காதலன் சந்துருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திருமண நாளான்று அதிகாலையிலேயே திருமண மண்டபத்திற்கு வந்தார். தன்னுடன் கொண்டு வந்த மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார்.

சந்துரு அலறியது கண்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் அனைவரும் ஓடி வந்து அவரை மீட்டு வந்தவாசி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு சேர்ந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சந்துரு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி சந்துரு உயிரிழந்தார்.

இது குறித்து வந்தவாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்துரு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாலும் , அப்பெண்ணுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker