Latestமலேசியா

கேடிஎம் தலைவர் பதவி விலகல்!

கோலாலம்பூர், ஜூலை.11 – கேடிஎம் நிறுவனத் தலைவர் நவாவி அகமட் இம்மாத இறுதியில் தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

லங்காவியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஒரு புதிய தலைவரை நியமிப்பதற்கு வழிவிடும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினார்.

“முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தலைமையிலான முந்தைய அரசாங்கத்தின் அரசியல் கொள்கையின்படி எனது பதவி நியமனம் இருந்தது. மகாதீரின் அரசாங்கத்தின் கீழ் ஒருவரை கேடிஎம் தலைவராக நியமிக்க வழிவிட வேண்டும்,” என இன்று நடைபெற்ற கேடிஎம்-இன் நோன்புப் பெருநாள் விருந்து உபசரிப்பில் அவர் தெரிவித்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரியில் முடிவடைந்த அவரது சேவை காலம் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker