Latestமலேசியா

கை, கால், வாய்ப்புண் நோய் பரவ, பொம்மைகள் காரணமா?

கோலாலம்பூர், ஜூலை. 11- கை, கால் மற்றும் வாய்ப்புண் நோயிற்கு ஆளாகியுள்ள குழந்தையின் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பொம்மைகளை மற்ற குழந்தைகள் உபயோகிப்பதால், அந்நோய் தொடர்ந்து பரவி வருகிறது என்று சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

அந்நோயால் தாக்கப் பட்டுள்ள குழந்தையின் விளையாட்டுப் பொருட்களில் வைரஸ்கள் படிந்திருக்கும். அதேப் பொருட்களை மற்ற குழந்தைகள் உபயோகித்தால், அந்நோய் அவர்களுக்கும் பரவும் என்று சுகாதார அமைச்சின் நோய் கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநர் டத்தோ டாக்டர் சோங் சீ கியோங் கூறினார்.

“பாலர் பள்ளி நிர்வாகங்கள் மற்றும் தாயார்கள் தங்களின் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களையும், பொம்மைகளையும் சுத்தப் படுத்தி வைக்க வேண்டும். வைரஸ் பற்றியுள்ள கழிவறைகள் மற்றும் நாப்கீன்களை உடனடியாக சுத்தப் படுத்த வேண்டும். இல்லையேல், இந்த நோய் துரீதமாக பரவும்” என்று அவர் எச்சரித்தார்.

ஒரு குழந்தை அந்நோயிற்கு ஆளாகி இருக்கும் பட்சத்தில், தங்களின் மற்ற குழந்தைகளை, நோய்வாய் பட்டிருக்கும் குழந்தையுடன் விளையாட தாய்மார்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் டாக்டர் சோங் அறிவுறுத்தினார்.
அதுமட்டுமல்லாது, தங்களின் வீடுகளையும், தாய்மார்கள் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பினாங்கு மாநிலத்தில் இந்நோயால் தாக்கப் பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமையன்று 1,555-ஆக பதிவாகி இருந்தது. அந்த எண்ணிக்கை திங்கட்கிழமையன்று 1,616-ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜூல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

அனைத்து மாநிலங்களிலும், இந்த நோய்க்கு ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சோங் சொன்னார். ஆனால், அது குறித்து அவர் மேல் விவரங்களை வழங்கவில்லை.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker