Latestமலேசியா

சிறார் திருமணங்கள்: தடை செய்க! –பக்காத்தான் மகளிர்

கோலாலம்பூர், ஜூலை.11-நாட்டில் இனிமேற்கொண்டு சிறுவர் திருமணங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், அரசாங்கம் அத்திருமணங்களை தடை செய்ய வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் மகளிர் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டின் சிறுவர்களின் மேம்பாட்டிற்கு இவ்வாறான திருமணங்கள் பெரும் தடையாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு, அத்திருமணங்களுக்கு தடை விதிக்கப் பட வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் மகளிர் பிரிவுத் தலைவர் ஜுரைடா கமாருடின் அறிவுறுத்தினார்.

மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய மேம்பாட்டு அமைச்சு, இத்திருமணங்கள் மீது மறுபரீசிலனை செய்வதை விட, அவற்றை ஒரேடியாக தடை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதுமட்டுமல்லாது, பொதுவாக இவ்வாறான திருமணங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலைப்பதில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

“இத்திருமணங்களால், வயது குறைந்த தாய்மார்கள், ஐந்து வருடங்களுக்குப் பின்னர், தங்களின் குழந்தைகளை தனியாக வளர்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அவர்களே இன்னும் முழுமையாக வளராத போது, அவர்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப் படுகின்றனர்” என்று ஜுரைடா சொன்னார்.

2001-ஆம் ஆண்டு சிறுவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 18 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
2016-ஆம் ஆண்டில் அமல்படுத்தப் பட்ட சிறுவர் பாதுகாப்பு சட்டம். சிறுவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தியது என்று அவர் கருத்துரைத்தார்.

இந்தச் சட்டங்களை, அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஷாரியா நீதிமன்றங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஜுரைடா வலியுறுத்தினார்.

“இவ்வாறான பிரச்சனைகள், இஸ்லாத்தை மற்றவர்கள் தவறாக புரிந்துக் கொள்ள வாய்ப்பளிக்கின்றன. அதனை அனுமதிக்காதீர்கள். ஷாரியா நீதிமன்றங்கள் மட்டும் தான் சிறுவர் திருமணங்களை ஆதரிக்கின்றன” என்று அவர் சொன்னார்.

இது குறித்து, மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய மேம்பாட்டு அமைச்சு, ஷாரியா நீதிமன்றத்துடன் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக அவ்வமைச்சின் அரசியல் செயலாளர் ரொட்ஸியா இஸ்மாயில் கூறினார்.

திருமண வயதை 18-ஆக உயர்த்த பக்காத்தான் ஹராப்பான் தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker